தமிழகத்தில் முதல் முறையாக ஒரே தளத்தில் TNSTC | SETC | ( Mtc | Town | District Private) ரக பேருந்துகளின் கால அட்டவணை மற்றும் தமிழக முழுவதும் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிலையங்களின் விவரங்கள் உள்ளபடி உருவாக்கியுள்ளேன் ... எனது நோக்கம் அல்லது Tamilvandi.com நோக்கம் என்னால் முடிந்த வரை அரசு பேருந்துகளில் பயணிகளை சுலபமாக பயணம் செய்ய வைக்க வேண்டும் அரசு பேருந்து பயணத்தை ஊக்குவிப்பதற்கும் , மற்றும் இணையதளத்தில் எளிமையான, வசதியான, அரசு பேருந்திணை பெருமைபடுத்தும் விதத்தில் ஓர் இணைய தளம் உருவாக்கவேண்டும் என்பதே...
(My website is the first website in Tamil Nadu of having Tnstc | SETC | (Mtc | Town | District Private) Type Bus Schedule and Details of Major
Bus Stations across Tamil Nadu ,on the same site , The idea is to create a website that is simple, convenient, and proud of the government bus service .
To promote government bus travel, and to have a simple, convenient, government bus service on the Internet by that iam proud of creating this.)
About
Tamilvandi.com இது ஒரு இணையதள சேவை, இதில் தமிழ்நாடு பேருந்துநிலையத்தின் பேருந்து நேரங்கள், பேருந்தின் விவரம்,கால அட்டவணை பேருந்து நிலையத்தின் விவரங்கள் குறிப்பாக பேருந்து நிலையம் அமைப்பு,வடிவம், உருவான ஆண்டு, சேவைகள், பொதுமக்களுக்கான ஏற்பாடுகள், அனைத்தும் இத்தளத்தில் உருவாக்கியுள்ளேன்.மற்றும் இத்தளத்தில் உள்ள கருத்துக்கள் , நேர விவரங்கள் , மதிப்புகள் அனைத்தும் எந்நேரமும் மாறக்கூடும் ஏனேனில் இத்தளத்திற்கு அரசிற்கும், அரசாங்க ஊழியர்களுக்கும், அல்லது எந்த நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை இவை அனைத்தும் நான் எனது வியூகத்தில் கூறியவை, மற்றும் நான் தமிழகம் முழுவதும் சென்று சேகரித்த விவரத்தை கூறியுள்ளேன்.
Tamilvandi.comஉருவாக்கம் மற்றும் வரலாறு
இணையதளம்
-
பின்னாளில், ஓர் 15 பேருந்து நிலையத்தின் விவரங்கள் சேகரித்தவுடன் 2017 இறுதியில் முதல் முதலில் ஓர் இணையதளம் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்
-
பின்னர் ஓர் மூன்று மாத காலம் இணையதளம் உருவாக்கம் செய்ய பயின்றேன்.
-
காரணம்,இதனை மேற்கொள்ளும் அளவிற்கு போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அன்று இணைய தளம் வடிவமைப்பு நிபுணரை அணுக இயல முடியவில்லை.
-
மற்றும் பிறகு இதனை நானே எனக்கு என்னவாக நம் அரசாங்க பேருந்திற்காக இணையதளம் இருக்க வேண்டும் என்று எண்ணினேனோ அதனை அனைவருக்கும் விரும்பும்படி வடிவமைக்க தொடங்கினேன்.
இணையதளம் வெளியீடு
-
பிறகு 95% இணைய தளம் உருவாக்கம் முடிந்தவுடன் எனது கல்லூரி படிப்பும் நிறைவடைய இருந்தது, கல்லூரி காலங்களில் இதனை தொடங்கியதால் கல்லூரி முடிவதற்குள் இதனை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
-
இறைவன் அருளால், எனது கல்லூரி 2020 பிப்ரவரி மாதம் ஓர் கலைவிழா நடைபெற இருந்தது அந்நாளில் நான் எனது இணையதளத்தை வெளியிட வேண்டும் என்று எண்ணினேன்,
-
மற்றும் என் கல்லூரி நண்பர்களில் அன்பின் உதவியுடன் அன்று கலைவிழாவில் 500+ நபர்களின் முன்னிலையில் எனது இணையதளத்தை வெளியிட்டேன்.
Tamilvandi.com பெயர் காரணம்
-
இணையத்தளத்தை முழுமையாக உருவாக்கி முடித்துவிட்டேன், அதனை வெளியிட டொமைன் (Domain) அதாவது எனது இணையத்திற்கான பெயர் வைக்கவேண்டும், அதிலும் குறிப்பாக நான் எனது இணையதள முகவரி அனைவருக்கும் புரியும்படி இருக்க வேண்டும் , எளிதாக இருக்கவேண்டும் , குறிப்பாக தமிழ் வார்த்தை அல்லது ஏதேனும் தமிழ் கலந்த சொல் இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன்,
-
இறுதியில் எனது நண்பனுடன் கலந்துரைக்கும் பொழுது முடிவாக தமிழ்வண்டி.காம்- Tamilvandi.com என்ற பெயர் உருவானது அனால் இதற்கும் காரணம் நாங்கள் நினைத்த பெயர் 1.Nambhabus.com 2.Routeuvandi 3.tamilagavandi.com என்று என்னினேன் முடிவில் இப்பெயர்களுக்காண ஆண்டு வரி நிதி என்னிடம் அப்பொழுது இல்லாதகாரணத்தினால்.Tamilvandi.com பெயர் பிப்ரவரி மாதத்தில் உருவானது.
உருவான விதம்
-
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முதலில் எனக்கு கிடைத்த விவரங்களை வைத்து நான் பள்ளியில் படித்ததை வைத்து ஓர் இணையதளம் அதே ஆண்டு உருவாக்கினேன் மற்றும் அதன் பெயர் Tntimings என்று பெயர் சூட்டினேன் இதுவே எனது முதல் தளம் ஆகும் பிறகு அதனை கைவிடவேண்டிய சூழ்நிலை ஆனது காரணம் என்னுடைய இணையதளம் சரியாக வரவில்லை மற்றும் இணையதளம் உருவாக்கம் செய்யவதற்கு பயின்றதில்லை கலைக்கல்லூரி படிப்பினால் முழுமையான இணையதளம் உருவாக்கத்தில் அனுபவம் இல்லை அதற்காக ஆகவே பிறகு மூன்று மாதம் இணையதளம் உருவாக்கம் பயின்றேன் இறுதியாக tamilvandi.com உருவாக்கம்.
உருவாக்கம்
-
இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு முதல் அணைத்து பேருந்து நிலையங்களுக்கும் நேரடியாக சென்று பேருந்துகளின் விவரங்கள் (தளம் என் - Rt No, வாகன என் ) , பேருந்துகளின் கால அட்டவணை , பேருந்து நிலையம் தொலைபேசி என் போன்றவற்றை சேகரிக்க தொடங்கினேன், இன்றும் சேகரித்து வருகிறேன்.
தொடக்கம்
-
நான் சிறுவயது முதல் நமது தமிழக அரசு பேருந்தின் தீவிர ரசிகன் ஆகையால் நான் பெரும்பாலும் நம் அரசாங்க பேருந்துகளில் தமிழகம் முழுவதும் நிறைய பயணம் செய்திருக்கிறேன்
-
அதே போல் மூன்றரை (3+) வருடத்திற்கு முன் ஒருநாள் என் பயணத்தின் பொழுது எனக்கு ஏற்பட்ட பயண சிரமங்களால் குறிப்பாக பேருந்தின் கால அட்டவணை அறியாத காரணத்தினால் என்னால் அன்று என் பயணத்தை இனிமையாக தொடர முடியவில்லை அன்று எனக்கு ஏற்பட்ட சிரமத்தினால் நான் அன்று முடிவு செய்தேன் நம்மை போல் எவரும் பயணத்தின்பொழுது சிரமப்பட கூடாதென்று ஆகையால் அனைவரும் பயன்படுத்தும் படி நான் ஒரு இணையவழியில் அனைத்துவித பேருந்தின் விவரம் மற்றும் கால அட்டவணை அணைத்து மக்களும் தமது கைபேசி,கணினியில் பயணம் முன்பே அல்லது இதனை வைத்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்
-
மற்றுமோர் ஆசை தமிழக பேருந்துகளை பெருமைப்படுத்தும் படி ஓர் இணையதளம் உருவாக்கவேண்டும் இதனால் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களை சுற்றி தமிழ்நாடு போக்குவரத்து மூலம் பயணிக்க உதவுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் இத்தளத்தை நான் உருவாக்கினேன்.
எடுத்துக்கொண்ட ஆண்டு
-
ஆக இத்தளம் முடிவு அடைய சுமார் மூன்று ஆண்டுகள் எடுத்து கொண்டேன் காரணம் முதலில் பேருந்து நிலையங்களில் இணைத்ததைப்போல் விவரங்கள் சேகரிக்க முடியவில்லை, இணையதளம் வடிவமைப்பில் சில சிக்கல்கள் , மற்றும் கல்லூரி படிப்பு ஓர் பக்கம் மற்றும் சில நாட்களில் இதனை கைவிட்டுவிடவென்றும் என்று நினைத்தத்தாலும்.
-
பலவற்றிற்கும் பின், நான் கடந்த மூன்றரை வருடமாக ஏன் இன்றும் இந்த Tamilvandi.com உருவாக்கிவருகிறேன், அல்லது மேம்படுத்தி வருகிறேன்.
2017
Collected 20+ bus stand details...
2018
Start build this website
2020
Registered as Tamilvandi.com
2017
Started to Collect Bus Details
2017-End
Build Webiste In name of Tntimings, Dropped at 2020!!!!!
2018-End
sucessfully visited and collected 100+
2020 - Feb
Notablely Lauched.
என்னை பற்றி - about me
வணக்கம் நண்பர்களே, நான் அருணாச்சலம்,B.com
Founder / Designer / Developed / Maintaing - Tamilvandi.com
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்கள் பற்றி ஒற்றை வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய முதல் நபர் நான் என்று பெருமிதம் கொள்கிறேன்.
*As of 31.03.2020
Tamilvandi.com- புள்ளிவிவரங்கள்
Total Bus Time collected
Soon....
Total Bus Stand
Visited
Soon....
Total Bus Photos collected
Soon....
Map of bustands visited
நான் சென்ற பேருந்து நிலையங்களின் விவரங்கள்
From 2017 - 2021March.
total - 275
தங்கள் வருகைக்கு நன்றி ............